பலஸ்தீனர் பாடசாலையை இஸ்ரேல் தகர்ப்பு

பலஸ்தீனர் பாடசாலையை இஸ்ரேல் தகர்ப்பு

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பலஸ்தீனரின் West Bank இல் உள்ள பாடசாலை ஒன்றை இஸ்ரேலின் இராணுவம் ஞாயிரு தகர்த்துள்ளது. இந்த பாடசாலை பெத்லகேம் (Bethlehem) நகரில் இருந்து சுமார் 2 km தொலைவில் இருந்தது.

இந்த பாடசாலை சட்டவிரோதமானது என்று பலஸ்தீனர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் காரணம் கூறியுள்ளது.

இச்செயலால் வழமைபோல் தாம் திகைப்பு (appalled) அடைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் முதலை கண்ணீர் வடித்துள்ளது. பாடசாலை உடைப்பு சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. இந்த பாடசாலையை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் உதவி வழங்கி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பாடசாலையை உடைக்க முன் அங்கிருந்த ஆவணங்கள், தளபாடங்கள் அனைத்தையும் இஸ்ரேல் இராணுவம் எடுத்து சென்றுள்ளது.

அந்த பகுதியில் (Gush Etzion) சட்டவிரோதமாக குடியேறி உள்ள யூதர்கள் இவ்வகை தகர்ப்புகள் மேலும் தொடர வேண்டும் என்று கூறியுள்ளனர்.