பலஸ்தீன ஆதரவால் இன்னொரு நடிகையும் புறக்கணிப்பு

பலஸ்தீன ஆதரவால் இன்னொரு நடிகையும் புறக்கணிப்பு

காசா பலஸ்தீனருக்கு ஆதரவளித்த Melissa Barrera என்ற ஹாலிவுட் (Hollywood) நடிகை Scream என்ற திரைப்பட தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இந்த நடிகை காசாவில் நிகழ்வது “genocide and ethnic cleansing” என்று கூறும் வேறு ஒருவரின் பதிவு ஒன்றை தனது பதிவில் மீண்டும் மறுபதிவு (resharing) செய்தே தண்டிப்புக்கு காரணமாகும்.

அமெரிக்காவில் ஹாலிவுட், வர்த்தகத்தின் மையமான Wall Street, அரசியல் கட்சிகள் ஆகியவை யூதர்களின் ஆளுமையில் உள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக குரல் எழுப்பும் எவரும் இங்கு வளர இயலாது.

ஏற்கனவே 77 வயதான Susan Sarandon என்ற நடிகையும் பலஸ்தீனர் ஊர்வலம் ஒன்றில் பங்கு கொண்டதால் அவரின் முகவரால் பழிவாங்கப்பட்டு உள்ளார்.

Maha Dakhil என்ற ஹாலிவுட் முகவர் (agent) ஒருவரும் பலஸ்தீனருக்கு ஆதரவாக குரல் எழுப்பியதால் பழிவாங்கப்பட்டு உள்ளார்.

Dakhil தனது பதிவு ஒன்றில் இதயத்தை நெருடுவது ஒரு genocide ஐ கண் முன்னே காண்பதா அல்லது அந்த genocide ஐ மறுப்போரை காண்பதா என்று தெரியவில்லை என்பதே.

ஆனாலும் Dakhil க்கு பிரபல ஹாலிவுட் நடிகரான Tom Cruise குரல் கொடுத்தால் Dakhil தொடர்ந்தும் முகவர் பதவியை கொண்டுள்ளார். Tom Cruise இன் முகவரும் இவரே.