பலாலி-சென்னை விமான சேவையை தினசரியாக்க வேண்டுகள்

பலாலி-சென்னை விமான சேவையை தினசரியாக்க வேண்டுகள்

யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையில் கிழமைக்கு 4 தினங்கள் இடம்பெறும் விமான சேவையை தினசரி சேவையாக்க இலங்கை அரசு கேட்டுள்ளது.

அத்துடன் ரத்மலானை (Ratmalana), மாத்தறை (Mattala) ஆகிய விமான நிலையங்களுக்கும் Alliance Air சேவையை ஆரம்பிக்க இலங்கை அரசு கேட்டுள்ளது.

சென்னையில் இருந்து கொழும்புக்கு வரும் விமானத்தை பலாலியில் தரித்து செல்ல விடப்படுமா என்பது தெளிவாக கூறப்படவில்லை. சென்னைக்கும் கொழும்புக்கும் இடையில் ஏற்கனவே பல விமான சேவைகள் உள்ளன.

இலங்கையின் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

பண நெருக்கடியில் உள்ள Alliance Airlines அண்மையில் இந்திய மத்திய அரசிடம் இருந்து 300 கோடி இந்திய ரூபாய்களை ($36.5 மில்லியன்) உதவியாக பெற்று இருந்தது.