பல மில்லியன் டாலர்களை இழக்கும் வீடு கொள்வனவாளர்

பல மில்லியன் டாலர்களை இழக்கும் வீடு கொள்வனவாளர்

கனடாவின் Toronto நகரை அண்டிய Richmond Hill பகுதியில் (Yonge Street and Bond Crescent) புதிய வீடுகளை கொள்வனவு செய்ய முற்பணம் கட்டிய பலர் தமது கட்டு பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. Boss Luxury Towns என்ற புதிய Townhouse வீடுகளை கட்ட திட்டமிட்ட Ideal Developments என்ற நிறுவனம் மீது அரசு எடுக்கும் சட்ட நடவடிக்கைகளே காரணம்.

Shajirai Nadarajalingam என்பருக்கு சொந்தமான Ideal Developments நிறுவனம் சட்டப்படி பதிவு செய்து உரிமை (license) பெறாமலேயே மேற்படி வீடு கட்டும் பணியில் இறங்கி உள்ளதாக Ontario மாகாணத்தின் Home Construction Regulatory Authority கூறியுள்ளது. மேற்படி கட்டுமான வேலைகள் நிறுத்தப்பட்டதால் முற்பணம் கட்டியுள்ளார் தமது பணத்தை இழக்கின்றனர்.

மொத்தம் C$250,000 முற்பணம் கட்டிய Hasmukh patel என்ற 61 வயது நபர் தான் C$150,000 கட்டுப்பணத்தை இழக்க உள்ளதாக கூறியுள்ளார். இவர்போல் பலர் மொத்தமாக C$5.7 மில்லியனை இழக்க உள்ளனர். 2014ம் ஆண்டு திட்டமிடப்பட்ட மேற்படி வீடுகளின் கட்டுமான வேலைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. Ontario மாநிலத்து home warranty C$100,000 பணத்துக்கு மட்டுமே freehold வீடுகளுக்கு காப்புறுதி செய்கிறது.

2019ம் ஆண்டு நடராஜலிங்கத்தின் இந்த திட்டத்துக்கு C$13 மில்லியன் கடன் வழங்கியோர் தமது பணத்தை மீள பெற வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

Ontario சட்டப்படி condo வீடுகளை கட்ட பெறும் முற்பணங்கள் மட்டுமே பாதுகாப்பாக  ‘trust’ ஒன்றில் வைக்கப்படவேண்டும்.

Nadarajalingam தனது Ideal Hope அமைப்பு மூலம் இலங்கையின் நகுலேஸ்வரம் பகுதில் 36 சிறிய வீடுகளை கட்டி இருந்தார்.