பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல், 65 பேர் பலி

Pakistan

இன்று ஞாயிரு பாகிஸ்தானின் லாகூர் (Lahore) நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு சுமார் 65 பேர் பலியாகியுள்ளதுடன் சுமார் 300 பேர் காயமடைந்து உள்ளனர். பாகிஸ்தானில் உள்ள Jamaat-ul-Ahrar என்ற தலபான் குழு இத்தாக்குதலுக்கு உரிமை கொண்டாடி உள்ளது.
.
அப்பகுதியில் உள்ள கிறீஸ்தவர்கள் ஈஸ்டர் ஞாயிரை (Easter Sunday) அங்குள்ள சிறுவர் விளையாட்டு இடம் ஒன்றில் (Gulshan-e-Iqbal Park) கொண்டாடும் போதே இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது. அதனால் அதிகமாக பெண்களும், சிறுவர்களுமே இத்தாக்குதலுக்கு இரையாகி உள்ளனர்.
.
லாகூர் நகரம் உள்ள பாகிஸ்தான் மாநிலம் 3 நாள் மூன்று நாட்களுக்கு மாநில அளவில் துக்கம் கொண்டாட தீர்மானித்து உள்ளது.
.

பாகிஸ்தானில் சுமார் 2.5 மில்லியன் கிறீஸ்தவர்கள் உள்ளனர். அது மொத்த சனத்தொகையின் 1.6% மட்டுமே.
.