பாகிஸ்தானி கென்யாவில் கொலை, பாகிஸ்தான் காரணம்?

பாகிஸ்தானி கென்யாவில் கொலை, பாகிஸ்தான் காரணம்?

பாகிஸ்தானின் பிரபல ஊடக நபரான Arshad Sharif கடந்த ஞாயிறு இரவு ஆபிரிக்க நாடான கென்யாவின் (Kenya) தலைநகர் நைரோபியில் (Nairobi) வைத்து போலீசாரால்  சுட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார். குறிவைத்து செய்யப்பட்ட இந்த கொலைக்கு பாகிஸ்தான் உடந்தையா என்பதை அறிய விசாரணைகள் தேவை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

Sharif, வயது 49, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர். தனது உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த Sharif நாட்டைவிட்டு வெளியேறி UAE சென்றார். அவரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்தும்படி பாகிஸ்தான் அரசு கேட்டிருந்தது. அந்நிலையில் Sharif கென்யா சென்றார்.

இக்கொலை தொடர்பாக கென்யாவின் போலீசார் முன்னுக்கு பின் முரணான காரணங்களை கூறி வருகின்றனர். முதலில் Sharif சென்ற வாகனத்தை தவறாக அடையாளம் கண்டதால் சுடப்பட்டார் என்று கூறப்பட்டது. பின்னர் அந்த வாகனம் நிறுத்த மறுத்தால் சுடப்பட்டது என்று கூறப்பட்டது.

Sharif பாகிஸ்தானில் இடம்பெறும் ஊழல்கள் தொடர்பாக ஆவண படம் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கென்யா நாட்டு ஊடகவியலாளர் John Allan Namu தெரிவித்துள்ளார்.

இவரின் இறுதி சடங்குகள் வியாழன் இஸ்லாமபாத்தில் இடம்பெற்றது.