பாகிஸ்தான் பிரதமரை விலக்கியது நீதிமன்றம்

Pakistan

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் (Nawaz Sharif) இன்று வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் உயர்நீதிமன்றால் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ஏப்ரல் மாதம் வெளிவந்திருந்த Panama Paper வெளியிட்ட தகவல்களின்படி பிரதமரும், அவரின் 3 பிள்ளைகளும் நீதிமன்றால் குற்றவாளிகளாக காணப்பட்டு உள்ளனர். ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவில், ஐந்துபேரும் பிரதமரை குற்றவாளி என்றுள்ளனர்.
.
இந்த தீர்ப்பின் பின்னர் பிரதமர் தனது பதவியை.துறந்து உள்ளார். பதவி துறந்த பிரதமருக்கு பதிலாக வேறு ஒருவரை அவரின் கட்சி நியமிக்கும். புதிதாக நியமிக்கப்படுபவர் அடுத்த வருட தேர்தல்வரை பிரதமராக செயல்படுவார்.
.
பினாமி நிறுவனம் ஒன்றின் உதவியுடன் பிரதமர் குடும்பம் லண்டன் நகரில் சொத்துக்களை கொண்டிருந்தனர் என்றுள்ளது Panama Papers. நீதிமன்றத்தின் பார்வையில், பிரதமரின் மகன்களாகிய Hussain மற்றும் Hassan மேற்கூறிய பினாமி நிறுவனத்தை பயன்படுத்தி உள்ளனர்.
.
தீர்ப்பின் பின் பிரதமரின் ஆதரவாளர் வன்முறைகளில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பில் சுமார் 3,000 பாதுகாப்பு படையினர் நீதிமன்றை சுற்றி குவிக்கப்பட்டு உள்ளனர்.
.
பாகிஸ்தானில் மிகையான அளவில் ஊழல்கள் இருக்க, பிரதமரை மட்டும் நீதிபதிகள் தண்டிப்பது அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றனர் பலர். பிரதருக்கு அந்நாட்டு பலம் கொண்ட இராணுவம் ஆதரவு இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
.