பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈரான்-பாகிஸ்தான் எல்லையோரம் பாகிஸ்தான் உள்ளே இருந்த Jaish al-Adi என்ற ஆயுத குழு மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை செய்துள்ளது. 

சுனி இஸ்லாமிய ஆயுத குழுவான Jaish al-Adi சியா இஸ்லாமிய ஈரானில் பல தாக்குதல்களை செய்திருந்தது.

ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நலமான தொடர்பாடல் உண்டு. இந்நிலையில் ஈரான் பாகிஸ்தான் உள்ளே பாகிஸ்தானுக்கு முன்னறிவித்தல் வழங்காது தாக்குதல் செய்வது எதிர்பார்க்காத ஒன்று.

அறிவிப்பு இன்றி செய்யப்பட்ட இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளது பாகிஸ்தான்.