பாக்-சீனா வீதிக்கு ஐ.நா. ஆதரவு, இந்திய விசனம்

Kashmir

சீனா தனது Belt and Road Initiative (BRI) திட்டத்தின் அங்கமாக ஒரு பெருந்தெருவை சீனா, பாகிஸ்தான் ஊடு அமைக்கிறது. இந்த பெருந்தெரு பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீர் ஊடாகவே செல்கிறது. தற்போது ஐ. நா. தீர்மானம் (resolution) ஒன்றும் இந்த பெருவீதி திட்டத்தில் இணைத்துள்ளது. அதனால் முழு காஸ்மீரையும் தனது என்று கூறும் இந்தியா விசனம் கொண்டுள்ளது.
.
கடந்த வெள்ளிக்கிழமை ஐ. நா. பாதுகாப்பு செயலகம் (UNSC) ஆபிகானிதான் தொடர்பாக எடுத்துக்கொண்ட தீர்மானம் ஒன்றே (UN Assistance Mission in Afghanistan) இந்திய விசனத்துக்கு காரணம்.
.
சீனா தனது BRI திட்டத்துக்கு சுமார் 100 நாடுகளை இணைத்துள்ளதாக கூறுகிறது. அதில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் அடங்கும்.
.

இந்தியா BRI திட்டத்தில் இதுவரை இணையவில்லை. China-Pakistan Economic Corridorஐ ஒரு அங்கமாக கொண்ட BRI திட்டத்தில் இந்தியா இணையின், அச்செயல் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீரை இந்தியா பாகிஸ்தானிடம் வழங்கியதாக அமையும் என்றுள்ளார் இந்திய வெளியுறவு செயலாளர் S. ஜெய்சங்கர்.
.