பாரடா பிரபாகரா

பாரடா பிரபாகரா
விளக்கம் கேட்டவரை
துரோகியென்று போட்டாயடா
விளக்கமாக கூறியவரையும்
துரோகியென்றே என்று போட்டாயடா
.
நீயெடுத்த உரிமையை
உன் சகோதரர்க்கு மறுத்தாயடா
Douglas அழிப்புக்காய்
உன் கரும்புலியொன்றும் வெடித்தாளடா
.
அப்பவெல்லாம் வருடிகளை
உன் காலடியில் வளர்த்தாயடா
இப்போ பாரடா பிரபாகரா
உன் வருடிகளின் அரசியல் உறவுகளை…
.
வெடித்தவள் உயிர் விரயமாக போனதடா
எடுத்த கருமம் மட்டுமல்ல
அரையில் உருத்திருந்ததும்
பறி போனதடா
.
இப்ப பாரடா பிரபாகரா
நீ விதைத்த அழிவுகளை
பாவம் உன் மக்கள் வேண்டுவதோ
உன் எதிரியின் தயவுகளை
.
(இளவழகன், April 6, 2018)
.
.