பாரிஸில் தாக்குதல், 128க்கும் மேல் பலி

Paris

 

France நாட்டின் Paris நகரில் உள்ள உணவகம் உட்பட பல இடங்களில் வெள்ளி இரவு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகவும், அரங்கு ஒன்றில் பெருமளவு பொதுமக்கள் பணயம் வைக்கப்படுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

.
உள்ளூர் தொலைக்காட்சி நிலைய செய்திகளில் 100 க்கும் மேற்பட்டோர் அரங்கு ஒன்றில் பணயம் வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. அதே நேரம் இடம்பெற்ற வேறு பல தாக்குதல்களுக்கு 128 பேருக்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னுமோர் இடத்தில் தற்கொலை தாக்குதலும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இச்செய்திகள் உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனமான BFM TV ஐ மேற்கோள் காட்டுகின்றன. பெருமளவு கொலைகள் Bataclan என்ற மண்டபத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
.

France எல்லைகளை தற்காலிகமாக மூடியுள்ளனர். அவ்வரசு அவசரகால நிலைமையை நடைமுறைப்படுத்தி உள்ளது. France ஐ நோக்கி செல்லும் பல விமான சேவைகள் பின்போடப்பட்டுள்ளன.
.