பாலஸ்தீனியர் தீர்வு திட்டம் முறியடிப்பு

UN_Israel_Palestinian

ஜோர்டான் (Jordan) நாட்டால் இன்று 15 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா. Security Council இல் முன்வைத்த இஸ்ரவேல்-பாலஸ்தீனியர் விவகாரத்துக்கான தீர்வு 1 வாக்கு குறைவால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்வு அடுத்த படியை அடைய மொத்தம் 15 வாக்குகளில் குறைந்தது 9 வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு 9 வாக்குகளை இந்த திட்டம் பெற்றிருந்தாலும், அமெரிக்கா இதை veto மூலம் நிராகரித்து இருக்கும். ஆனால் அமெரிக்கா veto பாவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதை விரும்பி இருந்திருக்கவில்லை.
.
இந்த திட்டம் நிராகரிக்கப்படுவதற்கு அமெரிக்கா அயராது உழைத்திருந்தது. அதற்கு இணங்க அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியாவும் இத்திட்டத்தை எதிர்த்து வாக்களித்தது. இங்கிலாந்து, லித்துவேனியா, நைஜீரியா,தென் கொரியா, ரவாண்டா ஆகிய 5 நாடுகளும் சமூகம் அளிக்காது தப்பித்தன. ஜோர்டான், சீனா, பிரான்ஸ், ரஷ்யா, லக்ஸ்சம்பெர்க், சாட், சிலி, அர்ஜென்டீனா ஆகிய 8 நாடுகள் தீர்வுக்கு ஆதரவளித்து இருந்தன.
.

இந்த திட்டப்படி இஸ்ரவேல்-பாலஸ்தீனியர் பேச்சுவார்த்தை 1 வருடத்துள் முடிய வேண்டும், இஸ்ரவேல் படிப்படியாக பாலஸ்தீனியர் பகுதிகளில் இருந்து மீளப்பெறவேண்டும், 2017 இல் முழு தீர்வும் நிலைநாட்டப்படவேண்டும். அனால் இஸ்ரவேலின் விருப்பம் எல்லை எதுவும் இல்லாத பேச்சுவார்த்தை மட்டுமே. அதேவேளை இஸ்ரவேல் தொடர்ந்தும் புதிய நிலங்களை கொள்ளை கொள்ளும்.