பிராஸில் சவுதி இளவரசரின் $300 மில்லியன் மாளிகை

PrinceSalman

சில கிழமைகளில் முன் சவுதி அரேபியாவில் billionaire Price Alwaleed bin Tatal உட்பட பல பெரும் பணக்கார இளவரசர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர். சவுதி அரசர் King Salman தனது விருப்பத்துக்குரிய, 32 வயதுடைய, மகன் Crown Price Mohammed bin Salman என்பவரை சவுதியின் அடுத்த அரசர் ஆக்கும் நோக்கில் அதிகாரங்கைளை வழங்கி இருந்தார். அந்த அதிகாரங்களை பயன்படுத்தியே இளவரசர் சல்மான் (Salman) தனக்கு போட்டியாக இருக்கக்கூடிய இளவரசர் Tatal போன்றோரை கைது செய்திருந்தார்.
.
கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோதமாக சொத்துக்களை முடக்கி உள்ளதகாவே இளவரசர் Salman அரசால் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. ஆனால் இன்று வெளியாகிய New York Times கட்டுரை ஒன்று, இளவரசர் சல்மானும் பெரும் தொகையான சொத்துக்களை முகவர் பெயர்கள் மூலம் வெளிநாடுகளில் கொள்வனவு செய்து முடக்கி வைத்துள்ளதாக கூறுகிறது.
.
இந்த கட்டுரைப்படி இளவரசர் சல்மானுக்கு பிரான்ஸ் நாட்டில் $300 மில்லியன் பெறுமதியான மாளிகை ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு உள்ளதாம். 2015 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட இந்த மாளிகை 57 ஏக்கர் நிலத்தையும் கொண்டது. இது உலகத்திலேயே அதி விலை கூடிய வீடு என்று கூறப்படுகிறது.
.
இந்த கட்டுரைப்படி Chateau Louis XIV என்ற மேற்படி மாளிகையை இரண்டு பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் உரிமை கொண்டுள்ளன. அந்த இரு நிறுவனங்களையும் Luxembourg நிறுவனமான Prestigestate SARL என்ற நிறுவனம் உரிமை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தை Eight Investment என்ற நிறுவனம் உரிமை கொண்டுள்ளது. Eight Investment நிறுவனம் இளவரசர் சலாமானுக்கு உரியது.
.
2015 ஆம் ஆண்டில் இளவரசர் சலமான் $500 மில்லியன் பெறுமதியான, 440 அடி நீளம் கொண்ட, உல்லாச படகு (yacht) ஒன்றையும், $450 மில்லியன் பெறுமதியான Leonardo da Vinci வரைந்த ஓவியம் ஒன்றையும் கொள்வனவு செய்திருந்தார்.
.
படம்: New York Times

.