பிரித்தானியாவில் வீட்டு விலை மீண்டும் வீழ்ச்சி

பிரித்தானியாவில் வீட்டு விலை மீண்டும் வீழ்ச்சி

பிரித்தானியாவில் வீட்டு விலை ஜூலை மாதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2022ம் ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலையில் அங்கு வீட்டு விலை 3.8% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது.

2022ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஏற்கனவே வீட்டு விலை 3.5% ஆல் விழுந்து இருந்தது.

அதிகரித்துவரும் வட்டி வீதமே வீட்டு விலை வீழ்ச்சி அடைய பிரதான காரணி ஆகிறது. Bank of England தனது வட்டியை 5.0% இல் இருந்து 5.25% ஆக வியாழக்கிழமை அதிகரித்து இருந்தது. 2008ம் ஆண்டுக்கு பின் இதுவே அங்கு அதிக வட்டியாகும்.

கடந்த ஆண்டு வீடு ஒன்றின் விலையின் 20% முதலுடன் அதை கொள்வனவு செய்யும் ஒருவர் தனது வருமானத்தின் 32% பங்கை மாதம் வீட்டு கடனை அடைக்க செலவிட்டதாகவும், அது அதிகரித்த வட்டி வீதம் காரணமாக இந்த ஆண்டு 43% ஆக அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வட்டி அதிகரிக்க வீடு கொள்வனவு செய்ய வசதி கொண்டோர் தொகை குறையும்.