பிரித்தானிய நுகர்வோர் விலைவாசி சுட்டியும் உச்சத்தில்

பிரித்தானிய நுகர்வோர் விலைவாசி சுட்டியும் உச்சத்தில்

இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்துக்கான நுகர்வோர் விலைவாசி சுட்டி 2021ம் ஆண்டின் சுட்டியுடன் ஒப்பிடுகையில் 11.1% ஆல் அதிகரித்து உள்ளது. இந்த அதிகரிப்பு கடந்த 41 ஆண்டுகளின் அதிகரிப்புகளில் மிகவும் அதிகமானது. 1981ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சுட்டி 10.1% ஆல் அதிகரித்து இருந்தது.

அண்மையில் பிரித்தானிய அரசு எரிசக்தி விலை ஆண்டுக்கு $2,960 க்கு மேல் செல்ல விடாது தடுத்தது. அவ்வாறு செய்திராவிட்டால் நுகர்வோர் சுட்டி 13.8% ஆக இருந்திருக்கும்.

சில நுகர்வோர் பொருட்களின் விலை சுட்டிக்கும் மேலால் அதிகரித்து உள்ளது. உதாரணமாக பாலின் விலை சுமார் 50% ஆல் அதிகரித்து.

Bank of England தற்போது 3.0% ஆகி உள்ள தனது வட்டி வீதத்தை 4.5% வரை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் Bank of England நுகர்வோர் விலைவாசி சுட்டியை 2% ஆக குறைக்க முனைகிறது. அனால் இவ்வகை முயற்சிகள் மக்களுக்கு பெரும் நெருக்கடியை வழங்கும்.

வட்டி அதிகரிப்பால் வீட்டு கடன் வட்டியும் அதிகரித்து அதனால் வீட்டு விலை குறைய ஆரம்பித்து உள்ளது. Zoopla என்ற வீடு விற்பனை நிறுவனம் தற்போது விற்பனைக்கு உள்ள வீடுகளில் 7% வீடுகள் தமது விலைகளை 5% க்கும் அதிக அளவில் குறைத்து உள்ளதாக கூறுகிறது.

ஜனவரி மாதம் இங்கு சுமார் 1.64% ஆக இருந்த 3-ஆண்டு fixed-rate வீட்டு கடன் வட்டி செப்டம்பர் மாதம் 4% ஆக அதிகரித்து, அக்டோபர் மாதம் 6% ஆக அதிகரித்து உள்ளது.