பிரித்தானிய பிரதமர் இன்று இரகசிய திருமணம்

பிரித்தானிய பிரதமர் இன்று இரகசிய திருமணம்

இன்று சனிக்கிழமை 56 வயதுடைய பிரித்தானிய பிரதமர் Boris Johnson 33 வயதுடைய Carrie Symonds என்பவரை இரகசியமாக திருமணம் செய்துள்ளார். கரோனா காரணமாக தற்போது லண்டன் நகர் திருமணங்களில் ஆகக்கூடியது 30 பேர் மட்டுமே பங்குகொள்ள முடியும்.

Roman Catholic Westminster Cathedral தேவாலயத்தில் சில குடும்பத்தினர் முன்னிலையில் இந்த திருமணம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. 2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இவர்கள், பிள்ளை ஒன்று பிறக்க இருந்த நிலையில், தமது தொடர்பை அறிவித்து இருந்தனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மகன் ஒன்று பிறந்து இருந்தது.

பிரதமருக்கு இது 3ஆம் விவாகம். இவரின் முதலாம் விவாகம் 1987 முதல் 1993 வரையும், இரண்டாம் விவாகம் 1993 முதல் 2020 வரையும் நிலைத்தது இருந்தன. தற்போதைய மனைவிக்கு இதுவே முதல் விவாகம்.

மூன்று விவாகங்கள் மூலமும் இவருக்கு குறைந்தது 6 பிள்ளைகள் உண்டு.