பிரித்தானிய வரி செலுத்த தவறிய Chancellor மனைவி

பிரித்தானிய வரி செலுத்த தவறிய Chancellor மனைவி

Rishi Sunak பிரித்தானியாவின் Chancellor of the Exchequer. இவர் ஒரு Boris Johnson ஆதரவாளர். இவரின் மனைவி Akshata Murty தனது வருமானத்துக்கு பிரித்தானிய வரி செலுத்த தவறியமை தற்போது கணவனின் அரசியலுக்கு குந்தகமாக அமைத்துள்ளது.

Akshata இந்தியாவின் InfoSys என்ற தொழில்நுட்ப நிறுவனத்தை ஆரம்பித்த நாராயண மூர்த்தி என்பவரின் மகள். மகளுக்கு தந்தையின் InfoSys நிறுவனத்தில் சுமார் $1 பில்லியன் பெறுமதியான பங்குகள் உண்டு. அந்த பங்குகள் மூலம் பெற்ற வருமானத்துக்கே Akshata பிரித்தானிய வரி செலுத்த தவறி உள்ளார்.

அவர் InfoSys பங்குகள் மூலமான வருமானத்துக்கு செலுத்த தவறிய பிரித்தானிய வரி சுமார் $25 மில்லியன் என்று கூறப்படுகிறது.

பிரதமர் Boris Johnson னும் Akshata பிரித்தானிய வரி விசயத்தில் தன்னை ஒரு அந்நியர் (non-domiciled) என்று கருதியதை அறியேன் என்றுள்ளார்.

மேற்படி விசயம் பகிரங்கத்துக்கு வந்ததால் தான் வருங்காலங்களில் பிரித்தானிய வரியையும் செலுத்துவேன் என்று இன்று வெள்ளி கூறியுள்ளார் Akshata.