பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி சீனா, ரஷ்யா உறவில்?

Philippines

நீண்ட காலமாக பிலிப்பீன்ஸ் அமெரிக்கா ஆதரவு நாடாகவே, குறிப்பாக இராணுவ கொள்கைகளில், இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போதைய சர்ச்சைக்குரிய ஜனாதிபதி Rodrigo Duterte தான் சீனாவுடனும், ரஷ்யாவுடனும் பொருளாதார உறவுகளை புதுப்பிக்க விரும்புவதாக கூறியுள்ளார். கடந்த கிழமை தான் விரைவில் சீனா செல்லவுள்ளதாகவும் இவர் தெரிவித்து உள்ளார்.
.
கடந்த ஜூலை மாதத்தில் ஆட்சிக்கு வந்த இவரால் அமெரிக்கா அச்சம் கொண்டுள்ளது. இவர் ஒபாமாவை தகாத சொற்களால் வசைமாரியும் செய்திருந்தார். இவரின் போதை தொடர்பான கொள்கைகளால் விஷம் கொண்ட ஒபாமா, இவரை குற்றம் சாட்டியபோதே அவை அப்படி தகாத சொற்களால் சாடி இருந்தார்.
.
பின்னர் ஐரோப்பிய நாடுகளையும் இவர் சாடியிருந்தார்.
.
தென் சீன கடல் விவாகரத்தில் பிலிப்பீன்ஸும், சீனாவும் முரண்பட்டாலும் இவர் சீனாவுடன் நல்லுறவு கொள்ள விரும்புகிறார். தான் அமெரிக்காவுடன் உறவுகளை முறிக்காமல், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் வர்த்தகத்தை அதிகரிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
.

சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா விரும்பும் இந்த காலத்தில் பிலிப்பீன்ஸின் இந்த கொள்கை விருப்பவில்லை. 1951 ஆம் ஆண்டு உடன்படிக்கை ஒன்றின்படி பிலிப்பீன்ஸ் யுத்த காலத்தில் அமெரிக்காவையே ஆதரிக்க வேண்டும்.

.