பிலிப்பீன் சர்வாதிகாரியின் மகனுக்கு 67% வாக்குகள்

பிலிப்பீன் சர்வாதிகாரியின் மகனுக்கு 67% வாக்குகள்

சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிலிப்பீன் சர்வாதிகாரி பெர்டினன்ட் மார்க்கோசின் (Ferdinand Marcos) மகன் பொங்பொங் (Marcos Jr) முன்னணியில் உள்ளார். சுமார் 80% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பொங்பொங் சுமார் 25.9 மில்லியன் அல்லது 67.8% வாக்குகளை பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள தற்போதைய உதவி சனாதிபதி Leni Roberedo 12.3 மில்லியன் வாக்குகளை மட்டும் பெற்றுள்ளார்.

ஜூன் 30ம் திகதி ஆட்சிக்கு வரும் பொங்பொங் 6 ஆண்டுகளுக்கு சனாதிபதியாக பதவி வகிக்கலாம்.

பொங்பொங் வெற்றி மூலம் 36 ஆண்டுகளுக்கு பின் சர்வாதிகாரி மார்க்கோசின் குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது. பெர்டினன்ட் மார்க்கோஸ் தலைமையில் இக்குடும்பம் சுமார் $10 பில்லியன் அரச சொத்தை களவாடி இருந்ததாக Philippines Presidential Commission on Good Governance கூறி இருந்தது. அப்போது பிலிப்பீன் பெரும் கடனில் இருந்தது.

பொங்பொங், வயது 64, முன்னர் பல அரசியல் பதவிகளை வகித்தவர். இவர் 2016ம் ஆண்டு உதவி சனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.

இந்த தேர்தலில் சுமார் 67 மில்லியன் மக்கள் வாக்களிக்க பதிவு செய்யப்பட்டு இருந்தனர்.