புதிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்: Hagel

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இன்று தனது இரண்டாம் ஆட்சிக்காலத்துக்கான புதிய உறுப்பினர்களை முன்மொழிந்துள்ளார். அமரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக Chuck Hagel (சக் கேகல்) பதவி வகிப்பார். CIA யின் தலைமையை John Brennan கொண்டிருப்பார். இவர்களின் தெரிவுகள் காங்கிரசினால் உறுதி செய்யப்படவேண்டும்.

ஜனாயக கட்சி உறுப்பினரான ஒபாமாவினால் பாதுகாப்பு செயலாளரராக அமர்த்தப்பட்ட Chuck Hagel ஒரு குடியரசு கட்சி உறுப்பினரும் முன்னாள் Nebraska கவர்னரும் ஆவார். 1946 ஆம் ஆண்டு ஜேர்மன்-அமெரிக்கன் வழி பிறந்த இவர் வியட்னாம் யுத்தத்தில் பல பதக்கங்கள் பெற்றவர். இவரின் நெஞ்சில் இப்போதும் சில வியட்னாம் யுத்த வெடி துண்டுகள் உள்ளது.

இஸ்ரேல் மீது இவர் கொண்டுள்ள கடுமையான போக்குகள் காரணமாக பல இஸ்ரேல் சார்பு அரசியல்வாதிகளும் பத்திரிகையாளரும் இவர் மீது வெறுப்பு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் ஈரான் மீதும் மற்றயவர்களைவிட நட்பான போக்கையே கொண்டுள்ளார். இவர் Leon Panetta வின் இடத்தை நிரப்புவார்.

அயர்லாந்து வம்சத்தினருக்கு மகனாக 1955 ஆம் ஆண்டு பிறந்த John Brennan நீண்டகால CIAயின் உறுப்பினரே. CIA கைதிகளை கொடுமைப்படுத்துவதை இவர் ஆதரித்திருந்தார்.