புதிய ஏவுதளத்தில் குறைபாடு, பூட்டின் கோபம்

Vostochny

USSR காலத்தில் ரஷ்யாவின் விண்கலங்கள் Kazakhstan நாட்டில் உள்ள ஏவுதளம் ஒன்றில் இருந்தே ஏவப்பட்டன. அப்போது Kazakhstan USSRஇன் அங்கமாகும். ஆனால் USSR உடைவின் பின் ரஷ்யா Kazakhstanனில் உள்ள ஏவுதளத்தை பயன்படுத்த வருடம் ஒன்றுக்கு சுமார் $117 மில்லியன் வாடகை செலுத்துகிறது.
.
அவ்வாறு வாடகை செலுத்துவதை தவிர்க்கவும், தம்நாட்டின் முழுக்கட்டுப்பாட்டில் ஏவுதளத்தை வைத்திருக்கவும் புதிதாக ஒரு தளத்தை ரஷ்யா கட்டியுள்ளது. குறைந்தது $5 பில்லியன் செலவில் அமைக்கப்பட்ட இந்த புதிய தளத்தில் இருந்து இன்று Soyuz 2.1a என்ற விண்கலம் முதல் தடவையாக ஏவப்பட இருந்தது. ஆனால் ஏவப்பட 150 செக்கன்கள் முன்னதாக முயற்சி தொழிநுட்ப கோளாறு காரணமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டது. அதனால் ஆத்திரம் அடைந்துள்ளார் ஜனாதிபதி பூட்டின். தவறுக்கு காரணமானோர் தண்டிக்கப்படுவர் என்றுள்ளார் பூட்டின்.
.

மொஸ்கோவில் இருந்து சுமார் 6,000 km கிழக்கே, சீனா மற்றும் வடகொரியாவுக்கு அண்மையாக இந்த புதிய தளம் அமைந்துள்ளது. இதன் பயன்பாட்டுக்காக 114 km நீள வீதிகள், 124 km நீள தண்டவாளங்கள் 25,000 பேர் குடியிருக்க தேவையான வசதிகளுடன் புதியதோர் நகரம் என்பனவும் அமைக்கப்பட்டு இருந்தன.
.