புதிய சீன கடிதத்தை IMF ஏற்கும், இலங்கை நம்பிக்கை

புதிய சீன கடிதத்தை IMF ஏற்கும், இலங்கை நம்பிக்கை

சீனாவிடம் இருந்து இலங்கை பெற்ற கடன் தொடர்பாக சீனா திங்கள் வழங்கிய “புதிய” கடிதத்தை IMF ஏற்று $2.9 பில்லியன் கடனை வழங்கும் என்றும் இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் அந்த கடிதத்தில் என்ன உள்ளது என்பதை இலங்கை பகிரங்கம் செய்யவில்லை.

இலங்கை கருதுவது போல் IMF சீன உறுதிமொழியை IMF ஏற்றால், அது இந்த மாத முடிவுக்குள் கடனை பகுதி பகுதியாக வழங்க ஆரம்பிக்கலாம். அதன் பின் ஏனைய கடன் வழங்கும் அமைப்புகளும் கடன் வழங்க முன்வரலாம்.

IMF இலங்கைக்கு $2.9 பில்லியன் கடனை வழங்க முன், சீனாவின் கடனுக்குக்கான விதிகளை மாற்றி அமைக்க முனைந்தது. கடன் முதலை குறைதல், வட்டியை குறைதல், கடனை திருப்பி அடைக்கும் காலத்தை நீட்டல் போன்ற பல வழிகளில் கடனுக்கான விதிகளை மாற்றலாம்.

ஜனவரி மாதம் Export-Import Bank of China இலங்கைக்கு கடனை திருப்பி அடைக்க மேலதிகமாக 2 ஆண்டுகளை வழங்கி இருந்தது. அது IMF க்கு போதியதாக இருக்கவில்லை.

இலங்கைக்கு சுமார் $51 பில்லியன் கடன் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் சுமார் 10% சீனாவிடம் இருந்து பெற்ற கடன். இலங்கை 2029ம் ஆண்டுவரை, அடுத்த 7 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு $6 முதல் $7 பில்லியன் வரை கடனை அடைக்க செலவிடல் அவசியம்.