பூட்டின் ஒரு war criminal என்கிறார் பைடென்

பூட்டின் ஒரு war criminal என்கிறார் பைடென்

ரஷ்ய சனாதிபதி ஒரு war criminal என்கிறார் அமெரிக்க சனாதிபதி பைடென். பைடென் இன்று திங்கள் தனது உரையில் பூட்டினுக்கு எதிராக war criminal வழக்கு தொடரப்பட வேண்டும் என்றும் பைடென் கூறியுள்ளார், அதாவது International Criminal Court (ICC) இதை விசாரணை செய்ய வேண்டும் என்று மறைமுகமாக கூறியுள்ளார்.

ஆனால் அமெரிக்கா தான் ICC அமைப்பில் அங்கத்துவம் கொள்ள மறுப்பதுடன், ICC அதிகாரிகள் அமெரிக்கா சென்று அமெரிக்கர்களை war crime குற்றங்களுக்காக விசாரணை செய்வதை தடுத்து வருகிறது. ICC அதிகாரிகளை மிரட்டியும் உள்ளது அமெரிக்கா. ICC செய்யும் இஸ்ரேல், பாலஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக் தொடர்பான விசாரணைகளையும் தடுக்கிறது அமெரிக்கா.

ரஷ்யாவும் ICC அமைப்பில் அங்கம் கொண்ட நாடல்ல. அதனால் ICC அதிகாரிகள் ரஷ்யா சென்று விசாரணை செய்யவும் முடியாது.

தனது சட்டங்களை நடைமுறை செய்ய தேவையான படைகளை கொண்டிராத ICC அமைப்பு அங்கத்துவ நாடுகளின் படைகளையே நம்பி உள்ளது.

அண்மையில் யுக்கிரைனின் Bucha நகரில் காணப்பட்டதாக உடல்களே war crime குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.