பூட்டின், செலென்ஸ்கி இந்தோனேசியாவில் சந்திப்பர்?

பூட்டின், செலென்ஸ்கி இந்தோனேசியாவில் சந்திப்பர்?

G20 அமைப்பின் இந்த ஆண்டுக்கான அமர்வு வரும் நவம்பர் மாதம் 15ம், 16ம் திகதிகளில் இந்தோனேசியாவின் Bali என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. தற்போது G20 அமைப்பின் தலைமையை இந்தோனேசியாவே கொண்டுள்ளது.

ரஷ்யா ஒரு G20 நாடாக இருந்தாலும் யுகிரைன் யுத்தம் காரணமாக அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் பூட்டினை G20 அமர்வுக்கு அழைக்க விரும்பவில்லை. ஆனாலும் இந்தோனேசியா அதற்கு இணங்கவில்லை. அதேவேளை யுகிரேனின் செலன்ஸ்கியை அழைக்க அமெரிக்கா விரும்பி இருந்தது. அதற்கு இணங்கிய இந்தோனேசியா பூட்டின், செலென்ஸ்கி இருவரையும் அழைக்கிறது.

பூட்டின் அமர்வுக்கு சென்றால் பைடென் போன்ற மேற்கு நாடுகளின் தலைவர்கள் அமர்வுக்கு செல்லாது, கீழ்நிலை அதிகாரிகளை அனுப்பவும் முனையலாம். பூட்டின் பங்கு கொள்ளும் கூட்டங்களில் பைடென் போன்ற மேற்கு நாடுகளின் தலைவர்கள் பங்கு கொள்வதற்கான நிகழ்த்தவு மிக குறைவே.

ஆனாலும் பூட்டினும், செலென்ஸ்கியும் உரையாடுவது அவசியம் என்று இந்தோனேசியா கருதி அவர்களை உரையாட வைக்கலாம். அடுத்துவரும் 6 மாதங்களின் இடம்பெறவுள்ள யுத்த முனை நிலவரங்கள் G20 அமர்வில் பிரதான பங்கை வகிக்கும்.

மேற்கு நாடுகளின் கைகளில் உள்ள G8 அமைப்பில் இருந்து ரஷ்யா ஏற்கனவே வெளியேற்றப்பட்டு உள்ளது.