பூட்டின்: தவிர்க்க முடியாத தாக்குதல்கள் இடம்பெறலாம்

பூட்டின்: தவிர்க்க முடியாத தாக்குதல்கள் இடம்பெறலாம்

மேற்கு நாடுகளின் அண்மைக்கால இராணுவ நகர்வுகளால் விசனம் கொண்ட ரஷ்ய சனாதிபதி தாம் எதிரிகள் மீது தவிர்க்கமுடியாத தாக்குதல் (unpreventable strike) செய்ய தயக்கம் கொள்ளோம் என்று இன்று ஞாயிறு கூறியுள்ளார்.

கடந்த கிழமை பிரித்தானியாவின் யுத்த கப்பலான HMS Defender கருங்கடலில் (Black Sea) கிரைமியா (Crimea) அருகே சென்று இருந்தது. ரஷ்யா 2014ம் ஆண்டு கிரைமியாவை தனதாக்கி இருந்தது.

பிரித்தானியா, அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் ரஷ்யா கிரைமியாவை யுக்கிரனிடம் இருந்து பறித்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தமக்கு கிரைமியா கடல் ஊடு செல்ல உரிமை உண்டு என்று பிரித்தானியா கூறி இருந்தது. ஆனால் ரஷ்யா பிரித்தானிய கப்பல்களுக்கு அருகில் குண்டு வீசி எச்சரித்து இருந்தது.

தம்மிடம் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கடலுக்கு அடியில், கடலின் மேற்பரப்பில், வானத்தில் நுழையும் எதிரிகளை அடையாளம் கண்டு தாக்கும் வசதி தம்மிடம் உள்ளது என்றும் பூட்டின் கூறியுள்ளார்.

St. Petersburg நகரில் ரஷ்யாவின் 50 யுத்த கப்பல்களும், 4,000 கடற்படையினரும் செய்துகொண்ட கடற்படை அணிவகுப்பு ஒன்றில் பூட்டின் கலந்திருந்தார்.