வரும் வெள்ளிக்கிழமை (மாசி மாதம் 15 ஆம் திகதி) 2012 DA14 என்ற விண்கல் பூமிக்கு மிக அண்மையில் செல்லவுள்ளது. இந்த கல்லின் பாதை வழமையாக செய்மதிகள் சுற்றிவரும் பாதையை ஊடறுத்து செல்கிறது. ஆனாலும் இந்த கல்லால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் நிகழ மாட்டாது என NASA அறிவித்துள்ளது.
மெரும்பாலான செய்மதிகள் பூமியில் இருந்து சுமார் 35,000 km உயரத்தில் சுற்றும். இந்த விண்கல் அந்த தூரத்திலேயே ஊடறுத்து செல்லும். பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான தூரம் சுமார் 385,000 km.
இந்த கல் சுமார் 130,000 மெற்றிக் தொன் பாரமுடையது என்கிறது NASA. இதன் விட்டம் 45 மீட்டர் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது. இக்கல் ஒரு தடவை சூரியனை சுற்ற 366.21 நாட்கள் எடுக்கும். ஆனால் இக்கல்லும் பூமியும் வெவ்வேறு தளத்தில் (surface) சூரியனை சுற்றுகின்றன. இக்கல்லின் வேகம் வலுகூடிய துப்பாக்கியில் இருந்து பாயும் குண்டின் வேகத்தை விட 8 மடங்கு அதிகமாக இருக்கும்.
66 மில்லியன் வருடங்களுக்கு முன் 10 km விட்டமுடைய விண்கல் பூமியுடன் மோதி 180 km விட்ட குழி ஒன்றை மெக்ஸிகோவில் உருவாக்கியுள்ளதுடன் டைனோசர்களையும் அழித்திருந்தது.
2012 DA14 என்ற இந்த கல் பூமியுடன் மோதினால் உண்டாகும் சக்தியானது ஹிரோசிமாவில் போடப்பட்ட குண்டு வெளியிட்ட சக்தியின் 120 மடங்காக இருக்கும் என்கிறார்கள்.
தகவல்: NASA, WSJ