பென்ரகன்: காபூல் தாக்குதலில் இறந்தது பொதுமக்களே

பென்ரகன்: காபூல் தாக்குதலில் இறந்தது பொதுமக்களே

ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி  அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்று ஏவிய ஏவுகணைக்கு ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் 10 பேர் பலியாகி இருந்தனர். இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க படைகளின் தலைமையகமான பென்ரகன் (Pentagon) மேற்படி தாக்குதலில் மரணித்தோர் பொதுமக்களே என்றும், தமது தவறை மன்னிக்கும்படியும் கேட்டுள்ளார்.

இந்த மன்னிப்பு வேண்டுகோளை இராணுவத்தின் மத்திய தலைமையக அதிகாரி ஜெனரல் Frank McKenzie விடுத்துள்ளார். தாக்குதல் நேரத்தில் குறி உண்மையில் ISIS-K என்றே தான் நம்பியதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் தவறுக்கு தாம் முழு பொறுப்பையும் ஏற்பதாவதும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Lloyd Austin என்பவரும் தாக்குதல் தவறு என்று கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.

தாக்குதலுக்கு பலியானோர்: Zamarai (43 வயது), Naser (30 வயது), Zamir (19 வயது), Faisal (15 வயது), Farzad (9 வயது), Armin (7 வயது), Binyamen (6 வயது), Ayat (2 வயது), Malika (2 வயது), Sumaya (2 வயது).