பெய்ஜிங் மரதன் ஓட்ட போட்டியில் குளறுபடி?

பெய்ஜிங் மரதன் ஓட்ட போட்டியில் குளறுபடி?

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இடம்பெற்ற அரை மரதன் (half marathon) போட்டியில் He Jie முதலாம் இடத்தை அடைந்து $5,500 பரிசை பெற்றுள்ளார். ஆனால் அவரின் வெற்றியில் சீனர் சந்தேகம் கொண்டுள்ளனர்.

இவருக்கு சில அடிகள் பின்னால் வந்த 3 ஆபிரிக்கர் இறுதி கட்டத்தில் முழுமூச்சுடன் ஓடாது சீனர் வெல்ல வழி செய்திருக்கலாம் என்று கருத வைக்கிறது.

முடிவுக்கு சில மீட்டர் தூரம் இருக்கையில் ஒரு ஆபிரிக்கர் சீனரை முன்னோக்கி செல்லுமாறும், இன்னோர் ஆபிரிக்கரை மெதுவாக ஓடுமாறும் சைகை காட்டியுள்ளார்.

சில தொண்டர் அமைப்புகள் நிகழ்த்தும் போட்டிகளில் சில போட்டியாளர் ஒன்றாக இறுதி கோட்டை கடப்பதுண்டு.

அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

World Athletics கணிப்பின்படி உலக அளவில் He Jie 77ம் இடத்தில் உள்ளவர்.