பெல்ஜியத்தில் இருவர் சுட்டு கொலை

பெல்ஜியத்தில் இருவர் சுட்டு கொலை

பெல்ஜியத்தில் அரபு மொழி பேசும் ஒருவர் செய்த துப்பாக்கி தாக்குதலுக்கு 2 சுவீடன் நாட்டவர் பலியாகி உள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்து உள்ளார்.

Belgium-Sweden Euro 2024 கால்பந்தாட்ட போட்டி இந்த நகரில் இடம்பெற்றது. இறந்தவர்கள் சுவீடன் அணியின் ஆடைகளை அணிந்து இருந்துள்ளனர். சூடு காரணமாக போட்டி தற்போது இடைநிறுத்தப்பட்டு உள்ளது.

சந்தேக நபர் கைது செய்யப்படாத காரணத்தால் மக்களை வீடுகளில் தங்கியிருக்க Eric van Duyse என்ற அதிகாரி கேட்டுள்ளார்.

சந்தேக நபர் தன்னை ஒரு ISIS ஆதரவாளன் என்று இணையம் ஒன்றில் கூறியுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.