பெல்ஜியத்தில் சில குண்டுவெடிப்புகள், 26 பலி

Brussels

பிறசில்ஸ் (Brussels) என்ற பெல்ஜியத்தின் (Belgium) தலைநகரில் இன்று காலை இடம்பெற்ற சில குண்டு தாக்குதல்களுக்கு குறைந்தது 26 பேர் பலியாகி உள்ளதுடன் குறைந்தது 130 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அங்குள்ள நிலக்கீழ் Subway ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலுக்கு 15 பேர் பலியாகி உள்ளனர். அங்குள்ள விமான நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதலுக்கு 11 பேர் பலியாகி உள்ளனர்.
.
இந்த விமான நிலையத்தில் பல விமானசேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இங்கு வரவிருந்த பல விமானங்களும் வேறு இடங்களுக்கு திசை திருப்பப்பட்டுள்ளன.
.
விமான நிலையத்தில் இருந்து மூன்றாவது குண்டும், சில AK 47 துப்பாக்கிகளும் பொலிசாரால் கண்டுபிடிக்கப்படு உள்ளது.
.

தாக்குதலுக்கு உள்ளான subway நிலையத்துக்கு அருகில் பல ஐரோப்பிய ஒன்றிய அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் பல தாக்குதலுக்கு பின்னர் மூடப்பட்டு உள்ளன.
.