பைடெனின் சனநாயக அமர்வு, இலங்கைக்கு அழைப்பில்லை

பைடெனின் சனநாயக அமர்வு, இலங்கைக்கு அழைப்பில்லை

டிசம்பர் மாதம் 9ம், 10ம் திகதிகளில் அமெரிக்க சனாதிபதி பைடென் Summits for Democracy என்ற அமர்வு ஒன்றை இணையம் மூலம் செய்யவுள்ளார். இந்த அமர்வுக்கு சுமார் 110 நாடுகளும், தாய்வான் போன்ற நாடுகள் அல்லாத அரசுகளும் பைடென் அரசால் அழைக்கப்பட்டு உள்ளன. அனால் இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இலங்கை மட்டுமன்றி, பங்களாதேசமும் அழைக்கப்படவில்லை.
ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் அழைக்கப்பட்டு உள்ளன.

அமெரிக்காவை தளமாக கொண்ட Freedom House என்ற சனநாயகத்தை அளவீடு செய்யும் அமைப்பு பாகிஸ்தானின் ஜனநாயகத்துக்கு 37/100 புள்ளிகளை மட்டுமே வழங்கி இருந்தது. இந்தியாவுக்கு 49/100 புள்ளிகள் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இலங்கைக்கு Freedom House 51/100 புள்ளிகள் வழங்கி இருந்தது. பங்களாதேசத்துக்கு 40/100 புள்ளிகள் வழங்கப்பட்டு இருந்தது.

சனநாயகத்துக்கு அதிக புள்ளிகள் பெற்ற நாடுகளை தவிர்த்து , குறைந்த புள்ளிகளை கொண்ட நாடுகளை பைடென் அரசு அழைத்தமை நகைப்புக்கு இடமாகியது. சனநாயகத்துக்கும் அப்பால் அரசியல் நோக்கமே அமர்வுக்கான அழைப்பை தீர்மானித்து உள்ளது.

Niger (48/100 புள்ளிகள்), Nigeria (45/100 புள்ளிகள்), மலேசியா (51/100 புள்ளிகள்), ஈராக் (29/100 புள்ளிகள்), Congo (20/100 புள்ளிகள்) ஆகிய நாடுகளும் கூடவே பைடென் அமர்வுக்கு அழைக்கப்பட்டு உள்ளன.