பைடெனை தவிர்க்கும் சீ ஜின் பிங், பைடென் தரப்பு விசனம்

பைடெனை தவிர்க்கும் சீ ஜின் பிங், பைடென் தரப்பு விசனம்

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் நிலவும் முறுகல் நிலையை தணிக்கும் நோக்கில் அமெரிக்க சனாதிபதி பைடென் சீன ஜனாதிபதியை நேரடியாக சந்திக்க முயன்று வருகிறார். ஆனால் சீன சனாதிபதி அதற்கான சந்தர்ப்பத்தை தவிர்த்து உள்ளார். அதனால் பைடென் தரப்பு விசனம் கொண்டுள்ளது.

வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் இத்தாலியின் ரோம் (Rome) நகரில் இடம்பெறவுள்ள G20 மாநாட்டில் சீன சனாதிபதியை சந்திக்க பைடென் திட்டம் கொண்டிருந்தார். ஆனால் சீன சனாதிபதி சி ஜின் பிங் G20 மாநாட்டுக்கு செல்லார் என்று சீனா தற்போது கூறுகிறது.

அதுமட்டுமன்றி Scotland இல் இடம்பெறவுள்ள ஐ.நாவின் COP20 மாநாட்டிலும் சீன சனாதிபதி கலந்துகொள்ளார் என்று சீனா அறிவித்து உள்ளது. அதனால் சீன ஜனாதிபதியை நேரடியாக சந்திக்க கொண்டிருந்த இரண்டு சந்தர்ப்பங்களையும் இழந்து உள்ளார் பைடென்.

இன்று செவ்வாய் அமெரிக்கா அங்கு சேவை அளித்துவந்த China Telecom என்ற தொலைபேசி நிறுவனத்தின் உரிமையை பறித்து உள்ளது. இந்த கட்டளையின்படி China Telecom வரும் 60 தினங்களின் தனது சேவையை முற்றாக நிறுத்தல் அவசியம். சி ஜின் பிங் மீதான விசனமே China Telecom மீதான ஆவேசத்துக்கு காரணம் என்றும் கருதவும் இடமுண்டு. China Telecom கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் சேவையை வழங்கி வருகிறது.