பைடென், சீ ஜின்பிங் G20 அமர்வில் நேரடியாக உரையாடுவார்

பைடென், சீ ஜின்பிங் G20 அமர்வில் நேரடியாக உரையாடுவார்

அமெரிக்க சனாதிபதி பைடெனும் சீன சனாதிபதி சீயும் இந்தோனேசியாவில் இடம்பெறவுள்ள G20 அமர்வில் நேரடியாக உரையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான G20 அமர்வு பாலி நகரில் திங்கள் ஆரம்பமாகும்.

இரு தலைவர்களும் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான அரச தொடர்புகளை வலுப்படுத்துவர் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் காலத்திலும், பின்னர் பைடென் காலத்திலும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அரச தொடர்புகள் அடிமடத்துக்கு சென்று இருந்தன. சீ மேலும் 5 ஆண்டுகள் பதவியில் இருக்க உள்ளதால் அமெரிக்கா தொடர்பை மீண்டும் வலுப்படுத்த முனைகிறது.

கடந்த செவ்வாய் இடைக்கால தேர்தலின் பின் பைடென் முற்றாக பின்னடைவு அடையாவிடிலும் அமெரிக்காவின் House சபையை இழக்கும் நிலையில் உள்ளார். இறுதி கணிப்புகள் House சபையை Republican கட்சிக்கு வழங்கினால், பைடென் அடுத்த 2 ஆண்டுகளும் பொதுவாக முடங்கி இருப்பார்.

யூகிறேன், தாய்வான், வடகொரியா, தென் சீன கடல் போன்ற பல விசயங்கள் உரையாடலில் அங்கம் கொள்ளும்.