பைடென், பூட்டின் வியாழன் மீண்டும் உரையாடுவர்

பைடென், பூட்டின் வியாழன் மீண்டும் உரையாடுவர்

அமெரிக்க சனாதிபதி பைடெனும், ரஷ்ய சனாதிபதி பூட்டினும் நியூ யார்க் நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு மீண்டும் அவசர உரையாடல் ஒன்றை செய்வர் என்று வெள்ளைமாளிகை அறிவித்து உள்ளது.

இந்த உரையாடல் பல விசயங்களை உள்ளடக்கினாலும், யுக்கிரைன் எல்லையோரம் ரஷ்யா தனது படைகளை குவிப்பது பிரதானமாக பேசப்படும். அமெரிக்கா, NATO, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கூட்டாக ரஷ்யாவை கட்டுப்படுத்த முனைகின்றன.

வரும் ஜனவரி 10ம் திகதி அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான அமர்வும் ஒன்று ஜெனிவாவில் நிகழவுள்ளது. ஜனவரி 12ம் திகதி ரஷ்யாவும், நேட்டோவும் பாதுகாப்பு தொடர்பாக உரையாவுள்ளன.

யுக்கிரைன் எல்லையில் ரஷ்யா சுமார் 100,000 படையினரை குவித்து உள்ளது. இதை அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் விரும்பவில்லை.

ரம்ப் கைவிட்ட ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறை செய்வது தொடர்பாகவும் உரையாடப்படலாம்.