பையனின் தெரு விற்பனை, 15 மொழிகளில்

Thaksin

கம்போடியா (Cambodia) என்ற நாட்டுக்கு வரும் உல்லாச பயணிகளுக்கு சிறு பொருட்களை விற்பனை செய்யும் 14 வயதுடைய Thaksin என்ற பையன் 15 மொழிகளில் பேசி உல்லாச பயணிகளை கவர்ந்து வருகிறான். அவனின் 11 வயது சகோதரன் 11 மொழிகளில் உரையாடும் திறமையை பெற்றுள்ளான். இவர்கள் இருவரும் உல்லாச பயணிகளுடன் உரையாடுவதன் மூலமே பிற மொழிகளை கற்றுள்ளனர்.
.
Thaksin தனது தாய் மொழியுடன், மலேய் (மலேசியா), Mandarin (சீனா), ஜேர்மன், பிரென்ச், தாய் (தாய்லாந்து), ஸ்பானிஸ் (Spain), ஜப்பானிஸ், கொரியான், உட்பட 15 மொழிகளில் உரையாடுகிறான். உரையாடுவது மட்டுமன்றி சீனம் உட்பட சில மொழிகளில் பாடும் திறமையையும் அவன் கொண்டுள்ளான்.
.
இவனின் திறமையை அறிந்த சீன தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அவனை சீனாவுக்கு அழைத்து தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் பாடவைக்கவுள்ளது.
.
இந்த இரு பையன்களும் தமது படிப்பை தொடர உதவி செய்ய அந்நாட்டு செஞ்சிலுவை சங்கம் முன்வந்துள்ளது.
.


.