பொருளாதார இடரில் அழகிய Puerto Rico

PuertoRico

மத்திய அமெரிக்காவுக்கு கிழக்காக உள்ள அழகிய தீவுகளில் ஒன்று Puerto Rico (போட்ரோ ரிக்கோ). இது அமெரிக்காவுக்கு சொந்தமானதோர் ‘அரைகுறை’ மாநிலம் (state). 1898 இல், அமெரிக்க-ஸ்பெயின் யுத்த முடிவில், அதுவரை ஸ்பெயின் கட்டுப்பாட்டில் இருந்த Puerto Rico, Philippines மற்றும் Guam ஆகிய இடங்கள் அமெரிக்கா வசமானது. 1917 இல் Puerto Rico பிரசைகளுக்கு அமெரிக்க பிரசைகள் உரிமை (citizenship) வழங்கப்பட்டது. ஆனால் Puerto Rico வுக்கு மற்றைய அமெரிக்க states களுக்கு உள்ள அதிகாரம் இல்லை. 1947 முதல் இவர்களுக்கு உள்ளூர் ஆட்சியை ஜனநாயகப்படி அமைக்கவும் உரிமை வழங்கப்பட்டது. ஆனால் இது ஒரு நாடும் அல்ல, ஒரு அமெரிக்க மாநிலமும் அல்ல. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவே இதன் ஜனாதிபதியும் ஆவார்.

இந்த அழகிய தீவு இப்போது கடனில் மூழ்கியுள்ளது. சுமார் 3.6 மில்லியன் மக்களை மட்டுமே கொண்ட இந்த தீவின் கடன் $70 பில்லியன். இங்கு வேலையில்லாதோர் அளவு 15.4%. 2011 இல் இங்கு நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 1136, அது அமெரிக்காவின் சராசரியின் 6 மடங்கு. 1996 இல் இங்கு சுமார் 160,000 தொழில்சாலை வேலைகள் இருந்தன, ஆனால் இன்று அது 75,000 ஆக குறைந்துள்ளது.

அமெரிக்காவின் Detroit ஒரு நகரம் என்ற முறையில் bankruptcy ஆக வழி இருந்தாலும் Puerto Rico ஏறக்குறைய ஒரு மாநிலம் (state) என்றபடியால் bankruptcy ஆகவும் முடியாது, அல்லது அது இதுவரை நடைபெறாத ஒன்று. Puerto Rico வை கடனில் இருந்து காப்பாற்ற அமெரிக்காவிடம் பணமும் இல்லை, அத்துடன் இவ்வளவு விலைகொடுக்க அமெரிக்காவில் அரசியல் ஆதரவும் இல்லை. அதேவேளை Puerto Rico வை கடனில் மூழ்கவிடவும் அமெரிக்காவால் முடியாது.விரைவில் இந்த விடயம் இரு பகுதிக்கும் பெரிய தலையிடியாகும்.