போதை கடத்தி சிறை சென்றவர் தாய்லாந்தில் அமைச்சர்

போதை கடத்தி சிறை சென்றவர் தாய்லாந்தில் அமைச்சர்

Thammanat Propao என்பவர் அஸ்ரேலியாவுக்கு heroin என்ற போதை கடத்த முயன்ற பொழுது அகப்பட்டு அஸ்ரேலியாவில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர். தண்டனை முடிய இவர் தாய்லாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

தாய்லாந்து திரும்பிய இவர் அங்கு இராணுவத்தின் ஆதரவுடன் அரசியலில் குதித்து அமைச்சரும் ஆனார். முன்னாள் இராணுவ captain ஆனா இவர் தாய்லாந்தில் இராணுவ ஆட்சி செய்யும் Prayuth Chan-ocha வின் ஆதரவுடனேயே அமைச்சர் ஆனார்.

1993ம் ஆண்டு இவர் $3.1 மில்லியன் பெறுமதியான 3.2 kg heroin கடத்தி முயன்ற குற்றத்துக்காக சிறை சென்றதை அறிந்த தாய்லாந்து எதிர்க்கட்சியினர் அமைச்சரின் பதவியை பறிக்க நீதிமன்றம் சென்றனர். அந்த நீதிமன்றம் தண்டனை அஸ்ரேலியாவில் வழங்கப்பட்டது என்றும், அந்நாட்டு தீர்ப்பு தாய்லாந்தில் செல்லுபடியாகாது என்றும் கூறி அமைச்சரின் பதவியை பறிக்க மறுத்துள்ளது.

அமைச்சர் தான் மா எடுத்து செல்கையிலேயே போதை என்று தவறாக கருதி கைது செய்யப்பட்டதாக முதலில் கூறி இருந்தார். ஆனால் The Sydney Morning Herald heroin கடத்தின் அகப்படத்தை ஆதாரங்களுடன் நிரூபித்து உள்ளது.