போலி ஆவணங்கள் மூலம் BBC டயானாவை ஏமாற்றியது

போலி ஆவணங்கள் மூலம் BBC டயானாவை ஏமாற்றியது

1995ம் ஆண்டு BBC செய்தி சேவையின் Martin Bashir என்பவருக்கு டயானா வழங்கிய நேர்முகம் உலகையும், இராணி குடும்பத்தையும் உலுக்கி இருந்தது. BBC சேவையின் Panorama என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பான நேர்முகத்தில் டயானா சார்ள்ஸ்-Camilla தொடர்பு, இராணி குடும்பம் தன்மீது கொண்டுள்ள வெறுப்பு ஆகியனவற்றை கூறியிருந்தார். அந்த நிகழ்ச்சியை பிரித்தானியாவில் 23 மில்லியன் மக்கள் பார்வையிட்டு இருந்தனர்.

ஆனாலும் தற்போதைய விசாரணைகளின்படி BBC சேவையின் Martin Bashir என்பவரே டயானாவுக்கு இவ்வகை பொய்யான தரவுகளை வழங்கி உள்ளார் என்று அறியப்படுகிறது. டயானாவுக்கு எதிராக இராணி குடும்பம் திட்டமிட்டு செயற்படுகிறது என்ற கருத்துப்பட Martin Bashir பொய் ஆவணங்களை தயாரித்து, டயானாவுக்கு வழங்கி, பின்னர் நேமுகத்தின்போது உனக்கு எதிராக இராணி குடும்பம் திட்டமிட்டு செயற்படுகிறதா என்று கேட்டுள்ளார். Bashir வழங்கிய ஆர்வங்களை நம்பிய டயானா “Yes” என்று பதிலளித்தார்.

முன்னாள் நீதிபதி Lord Dyson சுதந்திரமாக செய்த விசாரணையே இந்த உண்மைகளை நேற்று வியாழன் தெரிவித்து உள்ளது. Dysonனின் நேற்றைய அறிக்கை BBCயின் Lord Hall என்ற அதிகாரி 1996ம் ஆண்டு செய்த உள் விசாரணை உண்மைகளை மறைத்ததையும் சுட்டி காட்டியுள்ளது.
Bashir முதலில் Earl Spencer என்ற டயானாவின் சகோதரனை நாடி உள்ளார். Spencer மூலமே டயானாவை அடைந்து உள்ளார் Bashir.

டயானாவை ஏமாற்றும் நோக்கில், Matt Wiessler என்ற graphic design செய்பவரின் உதவியுடன், Bashir சில பொய் வங்கி ஆவணங்களை (bank statements) தயாரித்து உள்ளார். அந்த பொய்யான வங்கி ஆவணங்கள் Alan Waller என்ற Spencerரின் பாதுகாப்பு அதிகாரி Rupert Murdoch என்பவரின் அமெரிக்க செய்தி நிறுவனத்திடம் இருந்து இரண்டு முறை பணம் (ஒன்றில் 4,000 பௌண்ட்ஸ், மற்றையதில் 6,500 பௌண்ட்ஸ்) பெற்றுள்ளதாக காட்டியுள்ளன. Waller வழங்கும் இரகசியங்களுக்கான இலஞ்சமே அந்த பணம் என்று பொய்யாக கூறப்பட்டு உள்ளது.
அதுமட்டுமன்றி கணவர் சார்ள்ஸின் செயலாளர் Richard Aylard என்பவர் டயானாவுக்கு எதிராக திட்டம் தீட்டுவதாகவும், உரையாடல்களை Aylard களவாக ஒலிப்பதிவுகள் செய்வதாகவும் Bashir பொய் கூறியுள்ளார். டயானாவின் விவாகரத்தும் இடம்பெறலாம் என்றும் பொய் கூறப்பட்டுள்ளது.

Bashir கூற்றுக்களை முதலில் நம்பாத Spencer, நேரடியாக Steve Hewlett  என்ற BBC Panorama அதிகாரியை (editor) அழைத்து தான் Bashir என்பவரை நம்பலாமா என்று கேட்டுள்ளார். அதற்கு Hewlett தனது குழுவில் Bashir நம்பிக்கைக்கு உரியவர் என்றுள்ளார். அதன் பின்னரே டயானாவின் சகோதரன் Bashir கூறியவற்றை நம்பி உள்ளார். பின் டயானாவும் அக்கூற்றுகளை நம்பினார். 1995ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் திகதி Bashir டயானாவை சந்தித்தார். அந்த சந்திப்பு நேர்முகம் வரை சென்றது.

நேற்று வியாழன் இந்த உண்மைகள் வெளிவந்தபின் டயானாவின் மகன் வில்லியம்ஸ் BBCயின் செயற்பாடு தொடர்பாக கவலை தெரிவித்து உள்ளார். தனது தாயை BBC ஏமாற்றியதை தாய் என்றைக்குமே அறியப்போவது இல்லை என்றுள்ளார் வில்லியம்ஸ். தன் தாயின் மரணத்தில் BBC சேவைக்கும் பங்குண்டு என்றுள்ளார் வில்லியம்ஸ்.

கடந்த கிழமை Bashir உடல்நல குறைபாடு என்று காரணமாக கூறி BBC சேவையில் இருந்து பதவி விலகி உள்ளார்.