போலீஸ் காவலில் இருந்த அரசியல்வாதி சுட்டு கொலை

போலீஸ் காவலில் இருந்த அரசியல்வாதி சுட்டு கொலை

இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான Atiq Ahmed என்பவர் போலீஸ் காவலில் உள்ளபோதே சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். கூடவே இவரின் சகோதரரான Ashraf உம் சூட்டுக்கு பலியாகி உள்ளார்.

பல குற்ற செயல்களை செய்தமைக்காக சிறையில் உள்ள Atiq Ahmed நீதிமன்ற உத்தரவைன் காரணமாக வைத்திய பரிசோதனைக்கு Prayagraj (முன்னாள் Allahabad) நகரில் உள்ள வைத்தியசாலைக்கு போலீஸ் காவலுடன் அழைத்து செல்லப்பட்ட வேளையிலேயே சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையின் சந்தேக நபர்கள் மூவர் உடனேயே போலீசில் சரண் அடைந்து உள்ளனர்.

வறுமையான குடும்பத்தில் பிறந்து பாடசாலை படிப்பை இடைநிறுத்தி இருந்தாலும் இவர் 5 தடவைகள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு இருந்தார். அதேவேளை இவர் கடத்தல், பண அபகரிப்பு போன்ற குற்ற செயல்களில் செல்வமும் சேகரித்தார்.

இவர் குறைந்தது 2 கொலைகளுக்கு காரணமானவர் என்றும் கூறப்படுகிறது.

ஆனாலும் பலத்த போலீஸ் காவலில் இருக்கையில் இவர் கொலை செய்யபட்டது போலீசுக்கு அவமானத்தை விளைவித்துள்ளது.

இவரின் 19 வயதுடைய Asad மகன் கடந்த வியாழன் போலீசால் சுட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார்.