மகளை அடுத்த தலைவராக்க வடகொரிய கிம் முயற்சி?

மகளை அடுத்த தலைவராக்க வடகொரிய கிம் முயற்சி?

வடகொரியாவின் சர்வாதிகார தலைவர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) தனது மகளை அந்நாட்டின் அடுத்த தலைவராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாரா என்று வியக்கும் வகையில் பல பகிரங்க நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்கிறார். இந்த நிகழ்வுகள் இராணுவ நிகழ்வுகளாக இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போது சுமார் 9 அல்லது 10 வயதாக உள்ள மக்கள் Kim Ju Ae இன்று புதன் இரவு ஆரம்பிக்கப்பட்ட அந்நாட்டின் 75 ஆவது ஆண்டு விழாவுக்கும் அழைத்துவரப்பட்டு உள்ளார். அந்நாட்டு தொலைக்காட்சி சேவைகளும் மகளை “மரியாதைக்குரிய”, “அன்புக்குரிய” என்று அறிமுகம் செய்கின்றன.

சில கிழமைகளுக்கு முன் மகள் ஏவுகணை பரிசோதனை ஒன்றையும் பார்வையிட சென்றிருந்தார். அந்த புகைப்படமும் பகிரங்கம் செய்யப்பட்டிருந்தது.

அண்மையில் வடகொரிய இராணுவ உயர் அதிகாரிகள் கூடியிருந்த போசன நிகழ்வு ஒன்றிலும் மக்கள் பேச்சு ஒன்றை வழங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பேச்சில் வடகொரிய இராணுவம் “உலகிலேயே மிகவும் பலம் வாய்ந்த இராணுவம்” என்று அவர் புகழ்ந்திருந்தார்.

கிம் ஜாங் உன்னின் சகோதரியும் வடகொரிய அரசியலில் மிகவும் பலம் கொண்ட அதிகாரி.