மனிதர் மரணிக்க சில கணங்கள் இருக்கையில் அவர்களின் மனத்திரையில் வாழ்க்கையில் நிகழ்ந்த அதீத நிகழ்வுகள் பிரகாசித்து செல்லும் என்று பல கலாச்சாரங்கள் நம்புகின்றன. அதை தற்போது விஞ்ஞானமும் ஏற்றுக்கொள்ள முனைகிறது. மனிதர் மட்டுமல்லாது மிருகங்களும் இவ்வகை அசைபோடலை கொண்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
அண்மையில் epilepsy காரணமாக மரணிக்க இருந்த 87 வயது பெண் ஒருவரின் மூளையை (brainwaves) சில விஞ்ஞானிகள் கண்காணித்துக்கொண்டு இருந்தனர். ஆனால் அந்த நேரத்தில் அப்பெண் இருதய துடிப்பு (heart attack) காரணமாக மரணித்தார்.
மூளையில் Epilepsy ஏற்படுத்தும் தாக்கத்தை அறிய இருந்த விஞ்ஞானிகளுக்கு சந்தர்ப வசமாக இருதய துடிப்பால் இறந்த அவரின் மூளையின் தரவுகள் கிடைத்தன. அந்த தரவுகளின்படி மனிதன் இறக்க சுமார் 30 செக்கன்கள் இருக்கையில் அவரின் வாழ்க்கை சம்பவம்ங்கள் மனத்திரையில் வேகமாக ஓடி செல்கின்றன (flashback) என்று அறிந்துள்ளனர்.
Dr. Ajmal Zemmar (Vancouver General Hospital) கருத்துப்படி இவர்கள் பதிவு செய்த மூளை செயற்பாட்டு தரவுகள் ஒருவர் கனவு காணும்போது அல்லது ஒரு விசயத்தை ஞாகபடுத்தும்போது உருவாக்கும் தரவுகளுக்கு ஒத்ததாக இருந்துள்ளது.
ஆனாலும் இந்த 30 செகண்ட் நிகழ்வை கண்டவர் விண்டிலர். அதனால் முழு உண்மை என்றும் அறியப்படாது. அத்துடன் மகிழ்ச்சியான நிகழ்வுகள் மட்டும் அசை போடப்படுமா அல்லது துக்க நிகழ்ச்சியும் கலந்து அசை போடப்படுமா என்பதும் விஞ்ஞானத்தால் அறியப்படாது.
இந்த செயல் மூலம், மரணத்துக்கு தயார்படுத்தும் நோக்கில், இயற்கை எமது ஞாபங்களை மூளையில் இருந்து அழிக்க முனகிறதா என்றும் கேள்வி கேட்க வைக்கிறது.