மலேசிய பாடசாலை தீ தொடர்பாக 7 மாணவர் கைது

Malaysia

கடந்த வியாழன் அன்று மலேசிய இஸ்லாமிய பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீ தொடர்பாக 7 மாணர்வர்களை கைது செய்துள்ளதாக மலேசிய போலீசார் கூறியுள்ளனர். இந்த மாணவர்கள் 11 முதல் 18 வயதுடையவர் ஆவர்.
.
இந்த தீக்கு 21 மாணவரும், 2 ஊழியர்களும் பலியாகி இருந்தனர் (முதலில் 23 மாணவர் பலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது)..
.
ஆரம்பத்தில் போலீசார் இந்த தீயை மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட விபத்து என்றே கருதினர். ஆனால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த தீ ஒரு மூட்டப்பட்ட தீ என்பது புலனானது.
.
மரணித்த இளைஞர்களுக்கும், கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கும் இடையில் முன்னர் மோதல் இடம்பெற்று இருந்ததாகவும் அதன் தொடர்ச்சியே இந்த தீ மூட்டல் என்றும் கூறப்படுகிறது.

.
கைது செய்யப்பட்டுள்ள 7 பேரில் 6 பேர் marijuana போதையில் இருந்ததுவும் அறியப்பட்டு உள்ளது.
.