மாணவனை கொலை செய்த 20 மாணவருக்கு மரண தண்டனை

மாணவனை கொலை செய்த 20 மாணவருக்கு மரண தண்டனை

பங்களாதேச பல்கலைக்கழக மாணவன் ஒருவனை அடித்து கொலை செய்த அதே பல்கலைக்கழக 20 மாணவருக்கு இன்று நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. மேலும் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.

Abrar Fahad என்ற 21 வயது Bangladesh University of Engineering and Technology மாணவன் 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதி அதே பல்கலைக்கழக மாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட மாணவன் எதிர்க்கட்சி ஆதரவாளன். கொலையை செய்தவர்கள் ஆளும் Awami League கட்சியின் மாணவர் அணியான Chhatra League உறுப்பினர். கொலை செய்யப்பட்டவர் ஆளும் கட்சியை social media வில் அவதூறு செய்தார் என்பதே கொலைக்கு காரணம்.

மேற்படி கடுமையான தண்டனை இவ்வகை கொலைகள் இனிமேல் நிகழ்வதை தடுக்கும் என்று நீதிபதி Abu Zafar Md Kamruzzaman கூறியுள்ளார்.

மேற்கு நாடுகளின் அறிவை சப்பி, பரீட்சையில் துப்பி பல்கலைக்கழகம் செல்வதால் ஒருவர் முழுமையான அறிவாளி ஆகிவிட முடியாது. பாடவிதான படிப்பு நல்ல தொழிலுக்கு மட்டுமே பயன்படும். இவர்கள் பூரண அறிவாளிகள் என்பதற்கில்லை.