மாலி நாட்டு தாய் 9 குழந்தைகள் பெற்றார்

மாலி நாட்டு தாய் 9 குழந்தைகள் பெற்றார்

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியின் (Mali) 25 வயது பெண் ஒருவருக்கு 9 குழந்தைகள் பிறந்து உள்ளன. Halima Cisse என்ற இந்த பெண்ணுக்கு 5 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் நேற்று செய்வாய் பிறந்து உள்ளன. தாயும், ஒன்பது குழந்தைகளும் நலமாகவே உள்ளனர்.

ஒன்பது குழந்தைகளும் அறுவை சிகிக்சை (C-section) மூலமுமே பிறந்தனர். ஆனால் ultrasounds சோதனை 7 குழந்தைகள் வயிற்றில் இருந்ததை மட்டுமே காட்டி இருந்தது.

இந்த பெண் மாலி நாட்டவர் ஏற்றாலும், அங்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லாதபடியால் இவரை மொறாக்கோவுக்கு (Moracco) பிரசவத்துக்காக மாலி அரசு அனுப்பி இருந்தது. அதனால் தாயும், குழந்தைகளும் தற்போதும் மொறாக்கோவிலேயே உள்ளனர்.

2009ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பெண் ஒருவர் 6 ஆண் குழந்தைகளையும், 2 பெண் குழந்தைகளையும் பெற்று இருந்தார். இதுவரை அந்த பிறப்பே Guinness World Record பதிவில் இருந்தது.