மாலைதீவில் மீண்டும் சீன ஆதரவு சனாதிபதி 

மாலைதீவில் மீண்டும் சீன ஆதரவு சனாதிபதி 

மாலைதீவில் சனிக்கிழமை இடம்பெற்ற சனாதிபதி தேர்தலில் மீண்டும் சீன ஆதரவு கொண்ட சனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சீன சார்பு Mohamed Muizzu 54.06% வாக்குகளை பெற்று தேர்தலில் வென்றுள்ளார்.

தற்போதைய இந்திய சார்பு சனாதிபதி Ibrahim Mohamed Solih தேர்தலில் வெற்றி பெற்ற Muizzu வை வாழ்த்தியுள்ளார்.

புதிய சனாதிபதி வரும் நவம்பர் 7ம் திகதி முதல் பதவியை கையேற்பார். அதன் பின் மாலைதீவு மீண்டும் சீனாவின் ஆளுமையில் இருக்கும். தற்போது அங்கு நிலைகொண்டுள்ள இந்திய படைகள் வெளியேற்றப்படலாம்.

2018ம் ஆண்டுவரை மாலைதீவில் ஆட்சி செய்த சீன சார்பு சனாதிபதி Yameen பின்வந்த Solih யால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். Yameen னை தான் விடுதலை செய்வேன் என்று கூறுகிறார் இன்று தேர்தலை வென்ற Muizzu.