மாலைதீவு ஊடாக தப்பி ஓடும் கோட்ட

மாலைதீவு ஊடாக தப்பி ஓடும் கோட்ட

இலங்கை சனாதிபதி பதவியில் இருந்து விலகும் தனது post-dated கடிதத்தை புதன்கிழமை திகதி இட்டு வழங்கிய கோட்ட புதனுக்கு முன்னரே இலங்கை விமான படைக்கு சொந்தமான Antonov AN32 வகை படைகளை காவும் விமானம் மூலம் மாலைதீவை அடைந்துள்ளார்.

நாட்டில் இருந்து இவர் வெளியேறுவதை குடியகல்வு அதிகாரிகள் குறைந்தது இரண்டு தடுக்க முனைந்து இருந்தாலும் இவர் பின் வேறு வழி மூலம் விமானப்படை விமானத்தில் வெளியேறி உள்ளார். இவருடன் இவரின் மனைவி Ioma வும், வேறு சிலரும் வெளியேறி உள்ளனர்.

மாலைதீவு விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் (air traffic control) முதலில் அந்த விமானத்தை மாலைதீவில் தரையிறங்க அனுமதிக்கவில்லை என்றாலும், பின் மாலைதீவு பாராளுமன்ற பேச்சாளரும் (Majlis), முன்னாள் சனாதிபதியும் (Nasheed) தலையிட்டு விமானத்தை இறங்க அனுமதித்து உள்ளனர். இந்த விமானம் மாலைதீவில் உள்ளூர் நேரப்படி புதன் காலை 3:00 மணியளவில் தரையிறங்கி உள்ளது.

முதலில் செவ்வாய் பிற்பகல் 6:25 மணிக்கு பயணிகள் விமானம் மூலம் இவர்கள் டுபாய்க்கு வெளியேற திட்டம் இருந்தது. அதற்காக 15 கடவுச்சீட்டுகள் விமான நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டு இருந்தன. ஆனால் அது கைகூடவில்லை. பின்னர் 9:20 மணிக்கு அபுதாபி மூலம் வெளியேறும் முயற்சி இடம்பெற்றது. சில வேளைகளில் இவை திசை திருப்பும் முயற்சிகளாகவும் இருந்திருக்கலாம். ஏனென்றால் கடவுச்சீட்டுகள் விமான நிலையம் வந்திருந்தாலும் கோட்டா குடும்பம் அங்கு வந்திருக்கவில்லை.

கோட்டா குடும்பத்தை விமான நிலையம் வந்து சாதாரண பயணிகள் வரிசையில் இணைய விமான நிலையம் கேட்டு இருந்தது. ஆனால் அவர்கள் பயணிகள் பகுதிக்கு வரவில்லை.

பசிலும் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.