மிஹின் விமானசேவை இவ்வருடத்தில் நிறுத்தம்

Mihin

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவில், 2007 ஆம் ஆண்டில், சேவையை ஆரம்பித்திருந்த மிஹின் லங்கா விமான சேவை இந்த வருட இறுதிக்குள் சேவையை முற்றாக நிறுத்தும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் சேவைகளை ஸ்ரீலங்கன் விமானசேவை தொடரும் என்று ஸ்ரீலங்கனின் அதிகாரி அஜித் டயஸ் கூறியுள்ளார்.
.
மிஹின் விமானசேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஊழல், முறைகேடு போன்ற பல காரணங்களால் நட்டத்தில் இயங்கி வந்திருந்தது. மிஹின் சேவை இலங்கை அமைச்சரவையின் அங்கீகாரம் இன்றியே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. மிஹினுக்கு விமானங்களை குத்தகை வழங்கியிருந்த BH Air போன்ற நிறுவனங்கள் தமது விமானங்களை பறித்திருந்தன. இதற்கு சேவையை வழங்கிய ஸ்ரீலங்கன் விமானசேவையும் சேவைகளை நிறுத்தி இருந்தது.
.

ஸ்ரீலங்கன் விமான சேவையும் பெரு நட்டத்திலேயே இயங்குகிறது. ஸ்ரீலங்கன் Emirates விமான சேவையுடன் இணைந்து செயல்பட்டு இருந்தது. ஆனால் Emiratesஉடன் மோதல் கொண்ட ராஜபக்ச ஸ்ரீலங்கன் சேவையின் Emirates உடனான உறவை துண்டித்தார். அச்செயல் ஸ்ரீலங்கனின் வருமானத்தை பெரிதும் பாதித்தது. ஸ்ரீலங்கன் தற்போது சுமார் $3.2 பில்லியன் நட்டத்தில் உள்ளது.
.