மீண்டும் சனாதிபதி ரம்ப்?

மீண்டும் சனாதிபதி ரம்ப்?

அமெரிக்காவில் மீண்டும் ரம்ப் சனாதிபதி ஆகும் சந்தர்ப்பம் அதிகரித்து வருகிறது. Republican கட்சிக்குள் ரம்பை பின்தள்ள தற்போது எவரும் இல்லை. Democratic கட்சி சார்பில் போட்டியிடவுள்ள தற்போதைய சனாதிபதி பைடென் மிக குறைந்த ஆதரவையே கொண்டுள்ளார்.

தற்போதைய கணிப்புகளின்படி Republican கட்சிக்குள் ரம்ப் 54% ஆதரவை கொண்டுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள DeSantis 17% ஆதரவை மட்டுமே கொண்டுள்ளார்.

முன்னாள் உதவி சனாதிபதி Pence 3% ஆதரவையும், Scott 3% ஆதரவையும், இந்திய சீக்கிய வம்சம் வந்த Haley 3% ஆதரவையும், இந்திய தமிழ் வம்சம் வந்த ராமஸ்வாமி 2% ஆதரவையும் மட்டுமே கொண்டுள்ளனர்.

கட்சிக்குள் ரம்ப் பெரும் ஆதரவை கொண்டிருந்தாலும் அவர் மீது பல வழக்குகள் தொடர்கின்றன. ரம்ப் வென்று, வழக்குகளும் தொடர்ந்தால் அமெரிக்க அரசியல் பெரும் குழப்பத்தில் மாளும்.

அமெரிக்க சனாதிபதிக்கான அடுத்த தேர்தல் 2024ம் ஆண்டு நவம்பர் 5ம் திகதி இடம்பெறும்.