மீண்டும் செய்மதி ஏவ தயாராகிறது ஈரான்?

மீண்டும் செய்மதி ஏவ தயாராகிறது ஈரான்?

ஈரான் மீண்டும் செய்மதி ஒன்றை ஏவும் நோக்குடன் ஏவுகலம் (rocket) ஒன்றை ஏவு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளதாக அமெரிக்க செய்மதி படங்கள் கூறுகின்றன. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளது அமெரிக்கா. ஈரான் முன்னரும் பல தடவைகள் செய்மதி ஏவ முனைந்து தோல்வி அடைந்து இருந்தது.

Maxar Technologies என்ற நிறுவனத்தின் செய்மதி ஒளிப்பட கருவிகளே Imam Khomeini Spaceport என்ற ஈரானின் ஏவு தளத்தில் ஏவுகலம் உள்ளதை இன்று செய்வாய் காண்பித்து உள்ளது.

கடந்த மாதம் தாம் ஒரு ஆண்டுக்குள் 7 செய்மதிகளை ஏவ உள்ளதாக ஈரானின் அரச செய்தி நிறுவனமான IRNA  கூறி இருந்தது. இம்முறை ஏவலுக்கு Zuljanah என்ற solid-fuel மூலம் இயங்கும் ஏவுகலம் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஈரான் இவ்வகை ஏவல்களை செய்யக்கூடாது என்று கூறுகிறது அமெரிக்கா. இவ்வகை ஏவுகலம் மூலம் பெறும் அறிவு அணு ஆயுத ஏவல்களுக்கு பயன்படலாம் என்கிறது அமெரிக்கா.