மீண்டும் பெய்ஜிங் செல்கிறார் ரஷ்யாவின் பூட்டின்

மீண்டும் பெய்ஜிங் செல்கிறார் ரஷ்யாவின் பூட்டின்

ரஷ்ய சனாதிபதி சீனாவுடனான “no limit” உறவை வளர்க்க மீண்டும் பெய்ஜிங் செல்கிறார். இந்த மாதம் 17ம், 18ம் திகதிகளில் இடம்பெறவுள்ள Belt and Road Forum அமர்விலும் அவர் பங்கு கொள்வார்.

International Criminal Court பூட்டின் மீது தடை விதித்ததால் பொதுவாக தென் ஆபிரிக்கா, இந்தியா போன்ற வேறு நாடுகளுக்கு செல்லாத பூட்டின் சீனாவுக்கு துணிந்து செல்கிறார். அண்மையில் ஈரானுக்கும் பூட்டின் சென்று இருந்தார்.

2022ம் ஆண்டு சீனாவின் சீயும், ரஷ்யாவின் பூட்டினும் தங்களிடையே “no limit” உறவை அறிவித்து இருந்தனர்.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா ($18 டிரில்லியன்) பூட்டினுடன் ($2.2 டிரில்லியன் பொருளாதாரம்) பகிரங்கமாக மேலும் இணக்கங்களை செய்து உலகின் முதலாவது பெரிய பொருளாதாரமான  அமெரிக்காவுடன் ($25 டிரில்லியன்) பகைக்காது மேசைக்கு கீழால் இணைந்து பங்காற்றாக்கூடும் என்று கருதப்படுகிறது.

ரஷ்யாவின் எரிபொருள் நிறுவனங்களின் தலைவர்களும் கூடவே பூட்டினுடன் சீனா செல்கின்றனர்.

ரஷ்யா Power of Siberia 2 என்ற எரிவாயு குழாய் திட்டத்தை சீனவூடு அமைக்க விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த குழாய் சீனாவுக்கு மட்டுமன்றி வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா போன்ற தெற்கு ஆசிய நாடுகளுக்கும் ரஷ்யாவின் எரிவாயு இலகுவில் செல்ல வசதி செய்யும்.